Editorial / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரில், நேற்று (17) இடம்பெற்ற போட்டியொன்றில், 3-1 என்ற கோல் கணக்கில், றியல் சொஸைடட் அணியை றியல் மட்ரிட் வென்றுள்ளது.
றியல் மட்ரிட் சார்பாக, பொர்ஜா மயோரல், கரித் பேல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, கெவின் றொட்றிகாஸின் “ஓவ்ண் கோல்” மூலம் ஒரு கோல் கிடைக்கப் பெற்றிருந்தது. றியல் சொஸைடட் சார்பாகப் பெறப்பட்ட கோலையும் கெவின் றொட்றிகாஸே பெற்றிருந்தார்.
இப்போட்டியின் முடிவில், எட்டுப் புள்ளிகளுடன் லா லிகா தரவரிசையில், நான்காமிடத்தில், நடப்பு லா லிகா சம்பியன்களான றியல் மட்ரிட் காணப்படுகிறது. 12 புள்ளிகளுடன் முதாமிடத்தில் பார்சிலோனா காணப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .