Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 28 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பந்தை சேதப்பபடுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக இருந்த ஸ்டீவன் ஸ்மித், உப தலைவரான டேவிட் வோணர் மற்றும் துடுப்பாட்ட வீரர்ம கமரன் பன்கரப்ட் ஆகியோர் நாடு திரும்பவுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அறிவித்துள்ளது.
எனினும் பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்கும் டெரன் லீமனுக்கும் தொடர்பில்லை என விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்து அவர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியில் நீடிப்பார் என அவவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்மித், வோணர் மற்றும் பன்கரப்ட் ஆகியோருக்காண தண்டனை குறித்து 24 மணித்தியாலங்களுக்குள் அறிவிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து, தென்னாபிரிக்காவுக்கெதிரான நான்காவது டெஸ்ட் ஆரம்பமாவதற்கு முன்னர் டெரன் லீமன் இராஜினாமா செய்வார் என முன்னதாக கூறப்பட்டிருந்தது.
பந்தைச் சேதப்படுத்தும் திட்டம் குறித்து பயிற்சியாளர் குழுவுக்குத் தெரியாதென அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago