2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

லெவன்டேயிடம் தோற்றது பார்சிலோனா

Editorial   / 2019 நவம்பர் 03 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், லெவன்டேயின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா 1-3 என்ற கோல் கணக்கில் தோற்றது.

பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை லியனல் மெஸ்ஸி பெற்றிருந்தார். லெவன்டே சார்பாக, ஜொஸே கம்பானா, பொர்ஜா மயோரல், நெமஞ்சா றடோஜா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற றியல் பெட்டிஸுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் றியல் மட்ரிட் முடித்துக் கொண்டிருந்தது.

இதேவேளை, செவில்லாவின் மைதானத்தில் நேற்றிரவு  நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் அத்லெட்டிகோ மட்ரிட் முடித்திருந்தது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அல்வரோ மொராட்டா பெற்றிருந்தார். செவில்லா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஃபிராங்கோ வஸ்கூஸ் பெற்றிருந்தார்.

இந்நிலையில், அஸ்பன்யோலின் மைதானத்தில் நேற்றிரவு  நடைபெற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அஸ்பன்யோல் வென்றிருந்தது. வலென்சியா சார்பாக, டேனியல் பரிஜோ, மக்ஸிமில்லியானோ கோமெஸ் கொன்ஸலேஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அஸ்பன்யோல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க் றொக்கா பெற்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .