2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

லெவர்குசனிடம் தோற்ற மியூனிச்

Mayu   / 2024 பெப்ரவரி 12 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், பயேர் லெவர்குசனின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் தோற்றது.

லெவர்குசன் சார்பாக ஜோசிப் ஸ்டனிசிச், அலெக்ஸ் கிரிமல்டோ, ஜெரெமி பிறிம்பொங் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை அகஸ்பேர்க்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் ஆர்.பி லெய்ப்ஸிக் சமப்படுத்தியது.

புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 55 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லெவர்குசன் உள்ளது.

50 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மியூனிச் உள்ளதுடன், 40 புள்ளிகளுடன் உள்ள வி.எஃப்.பி ஸ்டட்கார்ட்டும், பொரூசியா டொட்டமுண்டும் கோலெண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம்,
நான்காமிடங்களிலுள்ளன. ஸ்டட்கார்ட் ஒரு போட்டி குறைவாக உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X