2025 மே 08, வியாழக்கிழமை

வரலாற்றுச் சாதனை படைத்த மஹ்மூத் மாணவிகள் கௌரவிப்பு

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நூருல் ஹுதா உமர்



கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்க போட்டிகள் திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் சனி (27), ஞாயிறு (28), திங்கட்கிழமைகளில் (29) நடைபெற்றது.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகள் 20 வயதுக்ட்பட்ட பெண்கள் பிரிவில் சம்பியனானதுடன், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இரண்டாமிடம் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணமட்ட சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை தேசிய மட்ட போட்டிகளுக்கு ஊக்கப்படுத்தி கெளரவப்படுத்தும் நோக்கில் மஹ்மூத் மகளிர் கல்லூரி சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வு புதன்கிழமை, (31) கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

சதுரங்க வரலாற்று சாதனை படைத்த  மஹ்மூத்  மாணவிகள் கல்லூரி முன்றலில் பூ மாலை அணிவிக்கப்பட்டு இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டதுடன், வெற்றி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றோர்கள் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டதுடன் , உடற்கல்வி பாட ஆசிரிய, ஆசிரியைகள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X