Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற நன்டிஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.
இப்போட்டியின் முதற்பாதியில் பரிஸ் ஸா ஜெர்மைனின் நட்சத்திர முன்களவீரரான நெய்மர் கோலொன்றைப் பெற்றபோதும், காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பால், பெனால்டி பகுதிக்குள் பரிஸ் ஸா ஜெர்மைனின் மத்தியகளவீரர் ஜூலியன் ட்ரெக்ஸ்லர் விதிமுறைகளை மீறி நடந்ததால் நிராகரிக்கப்பட்டது.
பின்னர், இரண்டாவது பாதியின் நான்காவது நிமிடத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனின் இன்னொரு நட்சத்திர முன்களவீரரான கிலியான் மப்பேயின் கோல் கம்பத்தை நோக்கிய அதிரடி உதையை நன்டிஸின் கோல் காப்பாளர் அல்பான் லஃபொன்ட் அபாரமாகத் தடுத்தார்.
எனினும், சக முன்களவீரர் ஏஞ்சல் டி மரியாவிடம் நெய்மர் கொடுத்த பந்தை அடுத்த மூன்றாவது நிமிடத்தில் அவர் கிலியான் மப்பேயிடம் கொடுக்க, அவர் அதை அழகாக பின்கால்களால் கோலாக்க பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலை பெற்றது.
பின்னர், மாற்றுவீரராகக் களமிறங்கிய பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் மெளரோ இகார்டியை அல்பான் லஃபொன்ட் வீழ்த்தியிருந்த நிலையில் போட்டி முடிவடைவதற்கு ஆறு நிமிடமிருக்கையில் வழங்கப்பட்ட பெனால்டியை நெய்மர் கோலாக்க இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.
16 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
47 minute ago
1 hours ago