2025 மே 17, சனிக்கிழமை

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த 4ஆவது ஆஷஸ் டெஸ்ட்

Freelancer   / 2023 ஜூலை 24 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மன்செஸ்டரில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து நேற்று முன்தினம் முடிவுக்கு வந்த நான்காவது டெஸ்ட்டானது மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு வந்த நிலையில், 2-1 என்ற நிலையில் தொடரில் அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

அவுஸ்திரேலியா: 317/10 (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் 51, மிற்செல் மார்ஷ் 51, ட்ரெவிஸ் ஹெட் 48, ஸ்டீவ் ஸ்மித் 41, மிற்செல் ஸ்டார்க் ஆ.இ 36, டேவிட் வோர்னர் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 5/62, ஸ்டூவர்ட் ப்ரோட் 2/68, ஜேம்ஸ் அன்டர்சன் 1/51, மார்க் வூட் 1/60, மொயின் அலி 1/65)

இங்கிலாந்து: 592/10 (துடுப்பாட்டம்: ஸக் குறொலி 189, ஜொனி பெயார்ஸ்டோ ஆ.இ 99, ஜோ றூட் 84, ஹரி ப்ரூக் 61, மொயின் அலி 54, பென் ஸ்டோக்ஸ் 51 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 5/126, கமரொன் கிறீன் 2/64, மிற்செல் ஸ்டார்க் 2/137, பற் கமின்ஸ் 1/129)

அவுஸ்திரேலியா: 214/5 (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் 111, மிற்செல் மார்ஷ் ஆ.இ 31, டேவிட் வோர்னர் 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்க் வூட் 3/27, கிறிஸ் வோக்ஸ் 1/31, ஜோ றூட் 1/32)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .