2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வெற்றியை நோக்கிப் பயணிக்கும் இலங்கை

Shanmugan Murugavel   / 2024 மார்ச் 24 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி இலங்கை பயணிக்கிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், சியல்ஹெட்டில் நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை, கலீல் அஹ்மட் (3), ஷொரிபுல் இஸ்லாம், அறிமுக வீரர் நஹிட் ரானா (3), தஜியுல் இஸ்லாமிடம் குறித்த இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தபோதும் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா, கமிந்து மென்டிஸின் தலா 102 ஓட்டங்களால் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், விஷ்வ பெர்ணாண்டோ (4), லஹிரு குமார (3), கசுன் ராஜிதவிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் தஜியுல் இஸ்லாம் 47, லிட்டன் தாஸ் 25 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கமிந்து மென்டிஸின் 164, டி சில்வாவின் 108, திமுத் கருணாரத்னவின் 52, பிரபாத் ஜெயசூரியவின் 25 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 418 ஓட்டங்களைப் பெற்று 511 ஓட்டங்களை பங்களாதேஷுக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்தது. பந்துவீச்சில், மெஹிடி ஹஸன் மிராஸ் 4, ரானா மற்றும் தஜியுல் இஸ்லாம் 2, ஷொரிஃபுல் இஸ்லாம், கலீல் அஹ்மட் ஆகியோர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ், விஷ்வ பெர்ணாண்டோ (3), கசுன் ராஜித, லஹிரு குமாரவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இன்றைய மூன்றாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறி வருகிறது. தற்போது களத்தில் மொமினுல் ஹஸன் ஏழு ஓட்டங்களுடனும், தஜியுல் இஸ்லாம் ஆறு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .