2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வெளியேற்றப்பட்டனர் அன்டர்சன், பேர்ட்டன்ஸ்

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது நாளான இன்று, உலகின் ஆறாம் நிலை வீரரான கெவின் அன்டர்சன், ஒன்பதாம் நிலை வீராங்கனையான கிகி பேர்ட்டன்ஸ் ஆகியோர் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சன், தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 6-4, 4-6, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின் பிரான்ஸெஸ் தியபோயேயிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, நெதர்லாந்தின் கிகி பேர்ட்டன்ஸ் தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 6-3, 3-6, 3-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அனஸ்டசியா பவ்லுசென்கோவாவிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், நடப்புச் சம்பியனும் உலகின் மூன்றாம்நிலை வீரருமான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 7-6 (7-5), 7-6 (7-3), 6-3 என்ற நேர் செட்களில் ஐக்கிய இராச்சியத்தின் டான் இவான்ஸை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால் தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் அவுஸ்திரேலியாவின் மத்தியூ எப்டேனை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நடப்புச் சம்பியனும் உலகின் மூன்றாம்நிலை வீராங்கனையுமான டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் சுவீடனின் ஜொஹன்னா லர்சனை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர் தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் பிரேஸிலின் பெயட்றிஸ் ஹடாட் மையாவை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் ஸ்லோனி ஸ்டீவன்ஸ் தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ஹங்கேரியின் டிமியா பாபோஸை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, உலகின் ஏழாம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், 7-5, 6-7 (9-11), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின் மக்கென்ஸி மக்டொனால்டை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவா, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் றோமானியாவின் இரினா-கமெலியா பெகுவை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .