Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டுக்குமிடையிலான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது.
செல்சி சார்பாக, தம்மி ஏப்ரஹாம் இரண்டு கோல்களையும், தியாகோ சில்வா ஒரு கோலையும் பெற்றனர்.
அந்தவகையில், இப்போட்டி முடிவில் பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 31 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் லிவர்பூல் காணப்படுகின்றது. 27 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லெய்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது. 26 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் காணப்படுகின்றபோதும், இவ்வணிகளை விட அவ்வணி ஒர்ரு போட்டி குறைவாகவே விளையாடியுள்ளது.
நான்காமிடத்திலுள்ள எவெர்ற்றனும் 26 புள்ளிகளையே பெற்றுள்ளபோதும், கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் அவ்வணி நான்காமிடத்தில் காணப்படுகின்றது.
12 minute ago
19 minute ago
20 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
20 minute ago
36 minute ago