2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

வைத்தியசாலையில் நிலையாக உள்ள என்கிடி

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 26 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் சனிக்கிழமை (25) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் தலையில் காயமடைந்தது போலத் தோன்றிய டெல்லி கப்பிட்டல்ஸின் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி என்கிடி அம்பியுலன்ஸில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தார்.

பஞ்சாப்பின் பிரியன்ஸ் ஆர்யாவின் பிடியெடுக்க முயன்றபோதே அவர் தலை தரையில் அடிபட்டிருந்தது. பின்னர் என்கிடி நிலையாக உள்ளதாகவும் சிறிது நேரத்தில் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்போட்டியில் பஞ்சாப் வென்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .