2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வொல்வ்ஸிடம் தோற்ற செல்சி

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸுன் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், செல்சிக்குமிடையிலான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் செல்சி தோல்வியடைந்தது.

செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஒலிவியர் ஜிரூட் பெற்றிருந்ததோடு, வொல்வ்ஸ் சார்பாக, டேனியல் பொடென்ஸ், பெட்ரோ நெட்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், வெஸ்ட்ப்ரோம்விச் அல்பியனுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை இல்கி குன்டோகன் பெற்றதோடு, வெஸ்ட் ப்ரோம் சார்பாகப் பெறப்பட்ட கோலானது ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X