2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஷெரிஃப்பிடம் தோற்ற றியல் மட்ரிட்

Shanmugan Murugavel   / 2021 செப்டெம்பர் 29 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற மோல்டோவாக் கழகமான ஷெரிஃப்புடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் மட்ரிட் தோற்றிருந்தது.

மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கரிம் பென்ஸீமா பெற்றிருந்ததுடன், ஷெரிஃப் சார்பாக, ஜசுர்பெக் யகிஷிபோவ், செபஸ்டியல் தில் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி தோல்வியடைந்திருந்தது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, இட்றிஸ்ஸா குயெ, லியனல் மெஸ்ஸி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் வென்றிருந்தது. அத்லெட்டிகோ சார்பாக, அந்தோனி கிறீஸ்மன், லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ரஃபேல் லியோ பெற்றிருந்தார்.

இதேவேளை, ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியக் கழகமான கிளப் புரூகேயிடம் லெய்ப்ஸிக் தோல்வியடைந்திருந்தது. லெய்ப்ஸிக் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்தோபர் என்குங்கு பெற்றதோடு, புரூகே சார்பாக, ஹன்ஸ் வனகென், மற்ஸ் றிற்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், உக்ரேனியக் கழகமான ஷக்தர் டொனெஸ்டெக்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .