Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 12 , மு.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர்மியுலா வண் பந்தயங்களில் அதிகூடிய வெற்றிகளாக, ஜேர்மனிய ஓட்டுநராக மைக்கல் ஷுமாக்கரின் 91 பந்தயங்களில் வெற்றிகள் என்ற சாதனையை மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் சமப்படுத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஈஃபிள் குறான் பிறியில் வென்றதன் மூலமே இச்சாதனையை ஹமில்டன் சமப்படுத்தியுள்ளார். இப்பந்தயத்தில் இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த ஹமில்டன் முதலிடம் பெற்ற நிலையில், மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன் இரண்டாமிடத்தையும், ஆறாமிடத்திலிருந்து ஆரம்பித்த றெனோல்ட் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டேனியல் றிச்சியார்டோ மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
அந்தவகையில், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் 230 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லூயிஸ் ஹமில்டனும், மெர்சிடீஸ் அணியின் ஹமில்டனின் சக பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ் 161 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், 147 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மக்ஸ் வெர்ஸ்டப்பனும் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .