Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச்சின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், வி.எஃப்.எல் வொல்வ்ஸ்பேர்க்குடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பயேர்ண் மியூனிச் வென்றது.
பயேர்ண் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் றொபேர்ட் லெவன்டோஸ்கி பெற்றிருந்ததோடு, வொல்வ்ஸ்பேர்க் சார்பாகப் பெறப்பட்ட கோலை மக்ஸிமில்லியன் பிலிப் பெற்றிருந்தார்.
இதேவேளை, டி.எஸ்.ஜி 1899 ஹொஃபென்ஹெய்மின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், ஆர்.பி லெய்ப்ஸிக்குமிடையிலான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் லெய்ப்ஸிக் வென்றது. லெய்ப்ஸிக் சார்பாகப் பெறப்பட்ட கோலை யூசுஃப் பெளல்சென் பெற்றிருந்தார்.
இந்நிலையில், எஃப்.சி கொல்னின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பயேர் லெவர்குசன் வென்றிருந்தது. பயேர் லெவர்குசன் சார்பாக, மிற்செல் வெய்ஸர், மூஸா டியபி, பற்றிக் ஸ்சிச், புளோரியன் விர்ட்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
13 minute ago
24 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
54 minute ago