2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஸ்பொட் பிக்ஸிங்கில் அவுஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள்?

Editorial   / 2018 மே 27 , பி.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக் காலத்தில் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஸ்பொட் பிக்ஸிங் இடம்பெற்றதாகவும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகள பிக்ஸிங் நடைபெற்றுள்ளதோடு, மேலுமொரு டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தை பிக்ஸிங் செய்ய முயன்றது அல்ஜஸீரா இன்று வெளியிட்ட காணொளியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, டுபாயில் இருபதுக்கு – 20 தொடரொன்றை ஸ்பொட் பிக்ஸிங்கில் ஈடுபடுவதற்காக உருவாக்குவதற்கு இலங்கையணியின் முன்னாள் வீரர்களான ஜீவங்க குலதுங்க, டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஆகியோரை அழைப்பது குறித்தும் குறித்த காணொளியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர்கள் இருவரும் அதற்கு தமது சம்மதங்களை குறித்த காணொளியில் வெளிப்படுத்துகின்றனர்.

நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் நிறுவனமான டி நிறுவனம் என்றழைக்கப்படும் நிறுவனத்தில் பணிபுரிபவரான அனீல் முனவாரே, கடந்தாண்டு ராஞ்சியில் நடைபெற்ற இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டியில், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்டவாறு துடுப்பெடுத்தாடிய இரண்டு துடுப்பாட்ட வீரர்களை பெயரிடுவது குறித்த காணொளியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சென்னையில் 2016ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மேற்குறிப்பிட்டவாறு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஓட்டங்களைப் பெற்றனர் என்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூதாட்டத்தில் பங்கெடுத்த இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த முன்னாள் உள்ளூர் கிரிக்கெட் வீரர் றொபின் மொறிஸின் வழிநடத்தல்களில், 2016ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கெதிரானதும் கடந்தாண்டு இந்தியாவுக்கெதிரானதும் காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளங்களை காலி ஆடுகளத்தின் பிரதான பராமரிப்பாளரும் காலி அரங்கத்தின் உதவி முகாமையாளருமான தரங்க இந்திக தயார்படுத்தியதாக குறித்த காணொளியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காணொளியில் இலங்கையின் உள்ளூர் வீரரான தரிந்து மென்டிஸும் இக்கலந்துரையாடல்களில் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இவ்வாண்டின் இறுதியில் காலியில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளமும் சூதாட்டத்துக்காக அமைக்கப்படும் என்றவாறு வெளிப்படுத்தியுள்ள குறித்த காணொளி சூதாட்டக்காரர்களின் வழிநடத்தல்களில், இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டியின்போது துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளமும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டியின்போது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமும் தயாரிக்கப்பட்டதாகதாகவும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இலங்கையிலுள்ள இன்னொரு தலைமை ஆடுகளப் பராமரிப்பாளரின் கருத்துப்படி, அல்ஜஸீராவால் குறிப்பிடப்பட்ட தரங்க இந்திக ஆடுகளப் பராமரிப்பாளர் இல்லையெனவும் ஆனால் காலி அரங்கில் பணியாற்றிய தற்காலிக பணியாளர்களுக்கு பொறுப்பானவர் எனவும் குறித்த இரண்டு டெஸ்ட் போட்டியின் ஆடுகளங்களுக்கு பொறுப்பானவர் இல்லையெனவும் தெரியவருகிறது.

குறித்த போட்டிகளில், இந்திய அணி தமது முதலாவது இனிங்ஸில் 600 ஓட்டங்களைக் குவித்திருந்ததுடன், அவுஸ்திரேலிய அணி தமது 18 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சுக்கே பறிகொடுத்திருந்தது. 

இதேவேளை, இருபதுக்கு -20 தொடரொன்றில் ஸ்பொட் பிக்ஸிங்கில் ஈடுபவது குறித்த றொபின் மொறிஸுடனான கலந்துரையாடலில் பாகிஸ்தானின் முன்னாள் சர்வதேச வீரரான ஹஸன் ராசாவும் காணப்படுகின்றார்.

றொபின் மொறிஸுக்கும் இரகசிய நிரூபருக்குமிடையிலான கலந்துரையாடலில் ஹஸன் ராசா பங்கெடுத்திருக்காதபோதும் றொபின் மொறிஸுக்கு அடுத்த கதிரையில் ஹஸன் ராசா காணப்படுகின்றார். தற்போது தடைசெய்யப்பட்டுள்ள இந்தியன் கிரிக்கெட் லீக்கில், 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் மும்பை சம்ப்ஸ் அணிகாக ஹஸன் ராசாவும் றொபின் மொறிஸும் விளையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .