2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஸ்மித்தின் மீள்வருகை தாமதமாகும்

Editorial   / 2019 ஜனவரி 14 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், தனது தடைக்காலம் முடிவடைந்து, மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றுவது தாமதமாகவுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள முழங்கை உபாதைக்குச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதைத் தொடர்ந்தே, இத்தாமதம் ஏற்படவுள்ளது.

தனது அணியின் வீரர்கள் பந்தைச் சேதப்படுத்திய போது, அதைத் தடுக்காமல் இருந்தார் என்ற குற்றத்துக்காக, ஸ்மித்துக்கு ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டது. அவரது தடை, இவ்வாண்டு மார்ச் மாத இறுதிக் காலத்துடன் முடிவடையவுள்ளது.

தடைக்கு மத்தியில், உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்மித், பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரில் விளையாடி வந்தார். எனினும், அவருக்கு ஏற்பட்ட முழங்கை உபாதையைத் தொடர்ந்து, அவர் நாடு திரும்பியிருந்தார்.

அவரது உபாதைக்குச் சத்திரசிகிச்சை  நாளை (15) மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அதன் பின்னர் 6 வாரங்களுக்கு, முழங்கைக்கான பாதுகாப்புக் கவசத்தை அணிய வேண்டும். அதன் பின்னர் தான், அவரால் பயிற்சிகளை ஆரம்பிக்க முடியும்.

இதன் காரணமாக, பாகிஸ்தான் பிறீமியர் லீக்கில் அவர் பங்குபற்ற முடியாமை உறுதியென்பதோடு, மார்ச் 23ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இந்தியன் பிறீமியர் லீக்கில் அவர் பங்குபற்றுவதும் சந்தேகத்துரியதாக உள்ளது.

சர்வதேசப் போட்டிகளில், பாகிஸ்தானுக்கெதிராக மார்ச் இறுதியில் ஆரம்பிக்கவுள்ள தொடரில் பங்குபற்றுவதும் சந்தேகத்துக்குரியது.

தற்போதைய ஒரே தெரிவாக, ஏப்ரல் 23ஆம் திகதிக்கு முன்னர், உலகக் கிண்ணத்துக்கான குழாம்கள் அறிவிக்கப்பட வேண்டுமென்ற நிலையில், அதற்கு முன்னர் அவர் முழு உடற்றகுதி அடைவது தான் காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .