Editorial / 2025 நவம்பர் 25 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதற்கு, அவரது தந்தையின் உடல்நிலை மட்டுமே காரணமல்ல, வருங்கால கணவர் பலாஷ் முச்சலின் 'துரோகம்'தான் உண்மையான காரணம் என வெளியாகும் தகவல்கள் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' தற்போது பரவி வருகின்றன.
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நவம்பர் 23-ம் திகதி சாங்லியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்த நிலையில், சங்கீத் நிகழ்ச்சியின்போது ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு அறிகுறிகள் ஏற்பட்டதால், திருமணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இதில் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நவம்பர் 23-ம் திகதி சாங்லியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்த நிலையில், சங்கீத் நிகழ்ச்சியின்போது ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு அறிகுறிகள் ஏற்பட்டதால், திருமணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இதில் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். பலாஷ் முச்சல், ஸ்மிருதியை மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்திற்கு அழைத்துச் சென்று, மண்டியிட்டு சினிமா பாணியில் காதலைச் சொன்ன வீடியோ மற்றும் புகைப்படங்களை ஸ்மிருதி தற்போது நீக்கிவிட்டார்.
நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டும் புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளன. தந்தையின் உடல்நிலைக்காகத் திருமணம் தள்ளிப்போனது என்றால், கொண்டாட்டப் புகைப்படங்களை ஏன் நீக்க வேண்டும்? என்ற கேள்விதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த ஸ்கிரீன்ஷாட்கள் உண்மையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், 'ரெட்டிட்' போன்ற சமூக வலைதளங்களில் இது குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. திருமணக் கொண்டாட்டங்களின்போது, அங்கே இருந்த ஒரு பெண் நடன இயக்குனருடன் பலாஷ் முச்சல் நெருக்கமாக இருந்ததாகவும், அதுதான் பிரச்சனைக்கு உண்மையான காரணம் என்றும் சில வதந்திகள் உலா வருகின்றன.
"உலகக் கோப்பையை வென்று தந்த ஒரு வீராங்கனைக்கு இப்படி ஒரு நிலைமையா?" என்று ரசிகர்கள் பலாஷ் முச்சலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தந்தையின் உடல்நிலை ஒருபுறம், காதலர் மீதான சர்ச்சை மறுபுறம் என ஸ்மிருதி மந்தனா கடும் மன உளைச்சலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. உண்மை என்ன என்பது சம்பந்தப்பட்டவர்கள் வாய்திறந்தால் மட்டுமே வெளிச்சத்துக்கு வரும்.
13 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago