Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஃபோர்முலா ஒன் கார் பந்தயங்களில் ஒன்றான இத்தாலி கிராண்ட்ப்ரீ விபத்தில் இருந்து 'ஹாலோ' பாதுகாப்பு கருவியே தனது உயிரைக் காப்பாற்றியதாக லூயிஸ் ஹமில்டன் தெரிவித்துள்ளார்.
ஏழு முறை உலக சாம்பியனான 36 வயதான ஹமில்டனின் மெர்சிடிஸ் கார் மீது, ரெட் புல்லின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனின் கார் ஏறி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக வீரர்கள் இருவரும் காயமடையவில்லை என்பதுடன், போட்டியை விட்டு வெளியேறினர்.
ஹமில்டன் மற்றும் வெர்ஸ்டாப்பன் இடையே இடம்பெற்ற பயங்கரமான மோதலுக்குப் பின்னர் டேனியல் ரிக்கார்டோ சாம்பியன் பட்டம் வென்றார்.
'ஹாலோ' என்றழைக்கப்படும் சாரதியின் தலைக்கு முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு வளைந்த, வலுவூட்டப்பட்ட பார், ஹமில்டனை மிகவும் கடுமையான தாக்கத்திலிருந்து பாதுகாத்துள்ளது.
"நான் இன்று மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். என்னையும் எனது கழுத்தையும் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி. நான் இன்னும் இங்கே இருக்கிறேன். இன்று யாரோ ஒருவர் என்னை கவனித்துக்கொண்டிருப்பதை நம்பமுடியாத ஆசீர்வாதமாக உணர்கிறேன்“ என்று ஹமில்டன் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025