2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஹைதராபாத்- மும்பை இன்று பலப்பரீட்சை

Editorial   / 2023 மே 21 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று (21)  பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2016-ம் ஆண்டு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. அதேவேளையில் மும்பை 13 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றுபட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டம் மும்பை அணிக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. சொந்த மண்ணில் அந்த அணி பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்து நிகர ரன் ரேட்டை அதிகரித்துக்கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது மும்பையின் நிகர ரன் ரேட் -0.128 ஆக உள்ளது.

14 புள்ளிகளுடன் உள்ள ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் நிகர ரன் ரேட் 0.180 ஆக இருக்கிறது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸுடன் இன்றிரவு மோதுகிறது.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி 16 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்யும். மும்பை அணிஇ ஹைதரபாத்தை வென்றால் அந்த அணியும் 16 புள்ளிகளை அடையும். இந்த சூழ்நிலை உருவானால் நிகர ரன் ரேட் முக்கியம் வகிக்கும். ஒருவேளை மும்பை அணி தனது ஆட்டத்தில் வெற்றி பெற்று, பெங்களூரு அணியானது குஜராத்திடம் வீழ்ந்தால் மும்பை பிளே ஆஃப் சுற்றுக்குள் எளிதாக நுழைந்துவிடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .