2025 மே 08, வியாழக்கிழமை

மட்டு. மத்தி கல்வி வலயத்தில் 37 மாணவர்கள் 9 ஏ சித்தி

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் இம்முறை முதற் தடவையாக 37 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.அகமட் லெவ்வை தெரிவித்தார்.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 27 மாணவர்களும், ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் 9 மாணவர்களும், ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் 7 மாணவர்களுமாக 37 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

இந்த வலயத்தில் இப்பெறு பேறுகளை பெறுவதற்கு காரணமாக இருந்த பாடசாலை அதிபர்கள், கற்பித்த ஆசிரியர்கள், ஊக்கமளித்த பெற்றோர்கள் மற்றும் இந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்கள் அகியோருக்க வலயக் கல்விப் பணிப்பாளர் என்ற வகையில் வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.அகமட் லெவ்வை தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X