2025 மே 05, திங்கட்கிழமை

மட்டு.மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிக்க 1350 பேர் தகுதி

Kogilavani   / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு மற்றும் வடமேல், மத்திய மாகாண சபைத் தேர்hதல்களின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிக்க 1350பேர் தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரியும் பொலிஸ் மற்றும் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படையைச்சேர்ந்த வீரர்களே இவ்வாறு தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

எதிர்வரும் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இவர்கள் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X