2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

யானை தாக்குதல்: இதுவரை 4 இற்கும் மேற்பட்டோர் பலி

Kogilavani   / 2014 ஜூலை 27 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

'மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் மாத்திரம் கடந்த 3 வருடங்களில் 4 இற்கும் மேற்பட்டவர்கள் யானை தாக்கி பலியாகியுள்ளனர். 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

'இதேவேளை, மாவட்டத்தில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் மரணமடைந்துள்ளனர். அத்துடன் 500இற்;கும் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த யானைகளை இப்பிரதேசத்தினைவிட்டு அகற்றுவதனால் மாத்திரமே இதற்கான தீர்வு கிடைக்கும்' என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பத்தரைக்கட்டைப்பிரதேசத்தில் தோட்டம் ஒன்றினுள் சனிக்கிழமை இரவு (26) புகுந்த யானைகள் அங்கு வளர்க்கப்பட்டிருந்த பெருந்தொகை பயன்தரு தென்னை, வாழை மரங்களை அழித்துள்ளது.

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை(27) உன்னிச்சை 6ஆம் கட்டையில் 3 வீடுகள் மற்றும் கடைகளை யானைகள் சேதமாக்கியுள்ளன. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைமைகளை நேரடியகா பார்வையிட்ட பின்னரே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இவ்வாறு தெரிவித்தார்.

தினமும் இவ்வாறு இப்பிரதேசங்களினுள் புகும் யானைகள் வீடுகள், சேனைப் பயிர்களையும் நாசமாக்கி வருவதாக இப்பிரதேச மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பலாச்சோலை கிராமத்துக்குள் 25ஆம் திகதி அதிகாலை யானையொன்று புகுந்து அட்டகாசம் புரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X