2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மஜீத் மாவத்தை கிராமவாசிகளுக்கு 89 இந்திய வீடுகள்

Menaka Mookandi   / 2014 மே 29 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் - புன்னைக்குடா வீதி, மஜீத் மாவத்தையில் மீள்குடியேறிய தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 89 வீடுகள் கிடைத்துள்ளதாக  கிராம முன்னேற்றச் சங்கத் தலைவர் அப்துல் றவூப் தெரிவித்தார்.

மீள்குடியேறிய மக்களில் 345பேர் இந்திய வீடமைப்புத்திட்ட வீடுகளுக்காக விண்ணப்பித்திருந்த போதிலும் பல கட்டங்களாக இடம்பெற்ற பரிசீலனையின் பின்னர் 89 குடும்பங்களுக்கே சிபார்சு கிடைத்துள்ளது.

இந்த 89 வீடுகளுக்கும் சிபார்சு செய்யப்பட்டுள்ளவர்கள்  தொடர்பில் ஆட்சேபனைகள் ஏதுமிருப்பின் பொதுமக்கள் அவ்வாறான ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அயராத முயற்சியின் பயனாக இங்கு வாழும் தமிழ் முஸ்லிம் குடும்பங்களுக்கு இந்திய உதவி வீட்டுத் திட்டம் மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்கள் கிடைத்து வருவதாக கிராம முன்னேற்றச் சங்கத் தலைவர் அப்துல் றவூப் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X