2025 மே 01, வியாழக்கிழமை

'மட்டக்களப்பில் 120 தலசீமியா நோயாளர்கள்'

Kogilavani   / 2014 ஜூன் 05 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

'மட்டக்களப்பு மாவட்டத்தில் 120 தலசீமியா நோயாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு குருதி கிரமமாக வழங்கப்படுவதன் மூலம் இன்று அவர்களின் உயிர்கள் பாதுக்கப்படுகின்றன. இந்த நோயுள்ளவர்களில் பலர் இன்று க.பொ.த.சாதரண தரம் மற்றும் க.பொ.த.உயர்தரம் போன்ற பரீட்சையை எழுதும் நிலைக்கு வந்துள்ளனர்' என  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.எஸ்.இப்றாலெவ்வை தெரிவித்தார்.

குருதி நன்கொடையாளர்களின் உதவியுடன் பலரின் உயிர்கள் காப்பற்றப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதன்கிழமை(4) நடைபெற்ற குருதி நன்கொடையாளர்களை கௌரவிக்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இன்று இலங்கையில் தாய் மற்றும் குழந்தைகளின் மரண வீதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் குருதி நன்கொடையாளர்கள் வழங்கும் ஒத்துழைப்பாகும்.

பிரசவத்தின்போது தாய்க்கு குருதி தேவைப்படும் அதை இந்த குருதி நன்கொடையாளர்கள் வழங்கும் குருதியினை அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதன் மூலம் அந்த தாயும் குழந்தையும் காப்பாற்றப்படுகின்றார்கள்.

அவர்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. இன்று இலங்கையை எடுத்துக் கொண்டால் தாய் சேய் மரண வீதம் குறைந்து விட்டது. குருதி நன்கொடையாளர்கள் வழங்கும் குருதி பலரின் உயிர்களை பாதுகாக்க உதவுகின்றது.

தாய் மற்றும் குழந்தைகளின் உயிர்களை பாதுகாக்க உதவுவது போல இப்பிராந்தியத்திலுள்ள தலசீமியா நோயாளர்களுக்கும் குருதி நன்கொடையாளர்களின் குருதி வழங்கப்படுகின்றது.

இவர்களுக்கு கிரமமாக குருதி வழங்கப்படுகின்றது. ஒரு காலத்தில் தலசீமீயா நோயாளர்களில் இளைஞர்களை காணமுடியாது. ஏனெனில் அவர்கள் சிறுவயதிலேயே மரணித்து விடுவார்கள். ஆனால் இன்று அவ்வாறில்லை.

இந்த நோயுள்ள ஒரு மாணவர் பல்கலைக்கழகத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு குருதி நன்கொடையாளர்கள் வழங்கும் குருதிகள் மூலம் இவ்வாறான நன்மையான காரியங்கள்; நடைபெறுகின்றன.

அதேபோன்று இரத்த புற்று நோயுள்ளவர்களுக்கும் குருதிகள் வழங்கப்படுகின்றன. அதேபோன்று வீதி விபத்துக்கள் மற்றும் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு காயமடைந்து வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கும் இந்த குருதிகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு குருதி நன்கொடையாளர்கள் வழங்கும் ஒத்துழைப்பும் உதவியும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிர்களை பாதுகாக்க உதவுகின்றது.
ஐம்பது கிலோ நிறைக்கு மேலுள்ள இரத்த அழுத்த நோயில்லாதவர்கள் குருதியினை நன்கொடையாக வழங்க முடியும்.

இவர்கள் வருடத்தில் மூன்று முறை குருதி நன்கொடை செய்யலாம். குருதியினை வழங்குவதற்கு பயப்படத்தேவையில்லை.

குருதி வழங்கும் ஒருவருக்கு அவரில் மீள் குருதி ஏற்பட்டு உடம்பில் தேக ஆரோக்கியம் காணப்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குருதி நன்கொடையாளர்களை ஊக்கப்படுத்துவதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியும் மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது'  என  அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .