2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இராஜதுரைகிராமம் அமரசிங்கம் 2ஆம் குறுக்குவீதி புனரமைப்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இராஜதுரை கிராமம், அமரசிங்கம் 2ஆம் குறுக்குவீதி புனரமைப்பு வேலைகள் முதற்கட்டமாக நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டின் எழுச்சி தேசிய அபிவிருத்திச் செயற்பாட்டுத் திட்டத்தின் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இதில், முன்னாள் மகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.வாசுதேவன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.இ.லதாகரன், பொருளாதார அபிவிருத்தி இணைப்பாளர் ஜெயரூபன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.கோமலரஜனி, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மு.பஞ்சாட்சரம், கிராம அபிவிருத்திச் சங்கப் பொருளாளர் ஜேக்கப் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இந்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X