2025 மே 02, வெள்ளிக்கிழமை

கடை உடைப்பு: 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளை

Kogilavani   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாநகர சபையின் சந்தைக் கட்டிடத்தொகுதியிலுள்ள பலசரக்கு கடை ஒன்று  இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு சுமார் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடையின் உரிமையாளர் வழமைப்போன்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

செவ்வாயக்கிழமை காலை கடையை திறப்பதற்கு வந்து பார்த்தபோது கடையின் கூரை உடைக்கப்பட்டு  பொருட்கள் திருடப்பட்டிருப்பதை அறிந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மட்டக்களப்பு பொலிஸார் மோப்ப நாய் சகிதம் தேடுதல்களை மேற்கொண்டதுடன்  விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .