2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வாவி அசுத்தமடைந்ததினால் 28 மீன் இனங்கள் அருகியுள்ளன

Kogilavani   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


வாவி அசுத்தமடைந்துள்ளதினால் 28  வகையான மீன் இனங்கள் அருகிப் போயுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

வாவியில் உள்ள 112 மீன் இனங்களில் கிளாத்தி, செத்தல், கிளக்கன், சிலுந்தல் போன்ற மீன் இனங்களே இவ்வாறு  அருகிப்போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வாவி அசுத்தமடைவதனால் உள்ள ஏனைய மீன் இனங்களும்; அழியும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரி எஸ்.கோகுலன் தெரிவித்தார்.

மழைக்காலங்களில் அதிக கழிவுப் பொருட்கள் கான்கள் வழியாக ஆற்றை வந்து சேர்வதனாலும் மற்றும் மண்ணரிப்பினாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கோகுலன் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், மழைகாலங்களில் ஆற்றின் கரையோரங்களில் ஏற்படும் மண்ணரிப்பைத் தடை செய்வதற்கான வேலைகளில் மட்டக்களப்பைச் சேர்ந்த கட்டமைபப்புத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைவாக கால்வாய்கள், ஆற்றின் படுக்கைள் மற்றும் ஆற்றின் ஓரங்கள் என்பவற்றில் இக்கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .