2025 மே 05, திங்கட்கிழமை

மட்டு. அபிவிருத்திகளுக்கான ரூ.29.8 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 04 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 29.8 மில்லியன் ரூபாவை நிதியொதுக்கீடு செய்துள்ளனர். 2013ஆம் ஆண்டுக்கான தமது நாடாளுமன்ற பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இவர்கள் இந்நிதியினை 394 அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இதில் அமைச்சர் பசீர் சேகுதாவூத் 52 அபிவிருத்தித் திட்டங்களுக்காக 49 இலட்சத்து இருபதாயிரம் ரூபாவும், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா 56 திட்டங்களுக்காக ஐம்பது இலட்சம் ரூபாவும், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் 28 திட்டங்களுக்காக 39 இலட்சம் ரூபாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா 83 திட்டங்களுக்காக ஐம்பது இலட்சம் ரூபாவும், சி.யோகேஸ்பரன் 94 திட்டங்களுக்காக ஐம்பது இலட்சம் ரூபாவும், பி.அரியநேந்திரன் 81 திட்டங்களுக்காக ஐம்பது இலட்சம் ரூபாவையும் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

சிறிய நீர்ப்பாசனம், சுகாதார வசதிகள், கலாசார நிலையங்களுக்கான உப கரணங்கள், ஒலி பெருக்கி வசதிகள், விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மீனவர் சங்கங்களுக்கான உபகரணங்கள், வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டங்கள், பொது நிறுவனங்களுக்கான தளபாட வசதிகள், கணினி மற்றும் பொட்டோக் கொப்பி இயந்திரங்கள் உள்ளிட்ட பல திட்டங்களுக்காக இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X