2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இராணுவத்தினர் குடியிருந்த 5 வீடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 22 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

இராணுவத்தினர் குடியிருந்து வந்த 5 வீடுகள் 24 வருடங்களின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (22) உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் உள்ள மீள்குடியேற்றக் கிராமமான வெல்லாவெளி நாற்சந்தியில் காணப்பட்ட  5 வீடுகளில், இலங்கை இராணுவத்தினர் 24 வருடங்கள் தொடர்ச்சியாக குடியிருந்து வந்துள்ளனர்.

இவ்வீடுகளில் குடியிருந்து வந்த இராணுவத்தினர் தற்போது  போரதீவுப்பற்று பிரதேசத்தின் பாலையடிவட்டை பழைய பொதுச்சந்தை அமைந்துள்ள இடத்திற்கு சென்றுள்ளதால் மேற்படி வீடுகளும் உரிமையாளர்களிடம் இன்று உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி கிராம சேவை உத்தியோகஸ்தர் நடாராச இராகுலன் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .