2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மட். மாவட்டத்தில் 68 இடங்களில் மின்வெட்டு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                                  (எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை செவ்வாய்க்கிழமை 68 இடங்களில் 9 மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு கல்லடி பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன்படி மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 8 மணி முதல் மாலை 5  மணி வரை காவத்தமுனை, ஓட்டமாவடி, வாழைச்சேனை, கறுவாக்கேணி, கிண்ணியடி, சின்னவேம்பு, பாசிக்குடா, கிரான், சந்திவெளி, முறக்கெட்டாஞ்;சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, உன்னிச்சை, ஆயித்தியமலை, பங்குடாவெளி, இலுப்படிச்சேனை, மரப்பாலம், கரடியனாறு, இராஜபுரம், கித்துல், கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, தும்பாலஞ்சோலை, ஐயங்கேணி, மிச்சிநகர், தளவாய், மீராகேணி, சதாம் உசைன் கிராமம், ஹிஸ்புல்லாஹ் கிராமம், கொம்மாதுறை, செங்கலடி, களுவங்கேணி, ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு. தன்னாமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, திருப்பெருந்துறை, ஊறணி, ஞானசூரியம் சதுக்கம், மட்டக்களப்பு நகரம், பார் வீதி, சீலாமுனை, பாலமீன்மடு, முகத்துவாரம், திராய்மடு, நாவலடி, டச்பார், கல்லடி, வாவி வீதி-1, வாவி வீதி-2, ஆஸ்பத்திரி வீதி, திமிலதீவு, புதுநகர், வவுணதீவு, மங்கிகட்டு, ஈச்சந்தீவு, நாவற்காடு,  கரவெட்டி, குறிஞ்சாமுனை, கன்னங்குடா, பருத்திச்சேனை, மண்டபத்தடி, கரையாக்கன் தீவு, தாண்டியடி மற்றும் பாவற்கொடிச்சேனை  வரையான பகுதிகளில்  மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .