2025 மே 02, வெள்ளிக்கிழமை

விபத்தில் காயமடைந்தவர் 7 நாட்களுக்கு பின் மரணம்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 01 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் நாவற்குடாவில் வைத்து கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த காத்தான்குடி 6 ஆம் குறிச்சி அகமட் பரீட் மாவத்தையை சேர்ந்த சமீம் (35) நேற்று மரணமடைந்துவிட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

நாவற்குடாவில் வைத்து மாடு ஒன்று மோட்டார் சைக்கிளுக்கு முன்பாக பாய்ந்ததில் மாட்டுடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பலத்த காயங்களுக்குள்ளான இவர் மட்டக்களப்பு போனதா வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .