2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

இலங்கை வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி விசேட நிகழ்வு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


இலங்கை வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி மட்டக்களப்பு மேற் தரக் கிளையில் இன்று வெள்ளிக்கிழமை பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

கிளையின் சிரேஷ்ட முகாமையாளர் எம். ஐ. நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், 56 மாணவர்களுக்கு ரண்கெகுளு சேமிப்புப் புத்தகங்களுடன் சேமிப்பு உண்டியல்கள், 5 பேருக்கு குறைந்த வட்டியிலான கடன்கள், 25 பேருக்கு அரச ஊழியர்களுக்கான கடன்கள், ஓய்வூதியம் பெறும் 15 பேருக்கான கடன்கள் என்பன வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ். குருகுலசிங்கம், விமானப்படையின் ஸ்கொட்ரண் தலைவர் ஜே. அமரசிங்க, உதவி முகாமையாளர் கே. சாமித்தம்பி, ஓய்வு பெற்ற முகாமையாளர் கே. அருள்ஜோதி உப்பட பலர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X