2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

உணவு விஷமானதால் 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Thipaan   / 2014 ஜூலை 23 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு அரசடித்தீவு விக்னேஷ்வரா மகா வித்தியாலயத்தில் இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 8 மாணவர்கள் உணவு விஷமானதால் சுகவீனமடைந்து  மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச் சம்பவம் உணவு நஞ்சானதால் ஏற்பட்டதா என்பதை ஆராய்ந்து வருவதாக மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ரி.தவனேநசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாணவர்களிடம் கேட்டபோது வீட்டிலிருந்து அவரவர் கொண்டுவந்த உணவையே உட்கொண்டோம். ஆனால், தாங்கள் தண்ணீரை குடித்தததன் பின்னரே மயக்கமும் வாந்தியும் வந்ததாக தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கொக்கடிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X