2025 மே 02, வெள்ளிக்கிழமை

எனது சொந்தப் பிரதேசத்தை விட்டு ஏனைய 04 பிரதேசங்களுக்கு அபிவிருத்திக்குழுத் தலைவராக உள்ளேன்: முரளிதர

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 31 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி ஆகிய 04  பிரதேசங்களும்  யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், யுத்தத்திற்கு போராளிகளை அள்ளி வழங்கியதும் மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த   மக்களே எனவும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இந்த நிலையில், தனது சொந்தப் பிரதேசத்தை விட்டுவிட்டு  மேற்படி 04  பிரதேசங்களுக்குமான  அபிவிருத்திக்குழுத் தலைவராக தான் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தப் பிரதேசங்கள் அடங்கியுள்ள பகுதி தனித் தமிழ் தொகுதியாகும். இந்த அடிப்படையில் மேற்படி பிரதேசங்களைத் தெரிவுசெய்து தற்போது அபிவிருத்திகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.

மட்டு. முனைத்தீவு சக்தி வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'பட்டிருப்புத்தொகுதி மக்கள் நினைத்தால் எதிர்காலத்தில் 03 நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கலாம். அந்த வகையில்; இந்தத் தொகுதியில் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்காலத்திலும் பல அபிவிருத்திகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றுக்கு கல்விச் சமூகம் உந்துசக்தியாக இருக்க வேண்டும்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களை நாங்கள் அனைவரும் சேர்ந்து வளப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும். இதனை விடுத்து கல்வியியலாளர்கள் மற்றும் அதிகாரிகளிடையே தனிப்பட்ட விரோ குரோத செயல்களைக் காட்டக்கூடது. அவ்வாறு காட்டினால் எமது தமிழ்ச் சமூகம் எவ்வாறு மென்மேலும் முன்னேறுவது?

கிழக்குப் பல்கலைக்கழகம் என்பது மட்டக்களப்பு மக்களுக்குரியது. அதில் உபவேந்தராக மட்டக்களப்பான்தான் இருக்க வேண்டும். அங்கு தற்போது இருக்கின்ற உபவேந்தரை மிகவும் கஷ்டத்தின்; மத்தியில் கொண்டுவந்து அவர் மூலம்  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது பல அபிவிருத்திகளை மேற்கொள்கின்றோம்.

எனவே, எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தலில் பொதுமக்கள் மற்றும் கல்விச் சமூகம் என நாங்கள் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் எமது பலத்தை நிருபிக்க வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • Rajahthurai Saturday, 01 February 2014 12:02 PM

    இவர் யாரென்று உலகத்திற்கே தெரியும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .