2025 மே 01, வியாழக்கிழமை

நிரந்தர வீடுகளின்றியுள்ள 08 குடும்பங்களுக்கு வீடுகள்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


நிரந்தர வீடுகளின்றி தற்காலிக இருப்பிடங்களில் வசித்துவந்த 08  குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு எஹெட் நிறுவனத்தின் வழிகாட்டலில் கொழும்பு ஹரிட்டாஸ் செடக் நிறுவனத்தால்  நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் நேற்று சனிக்கிழமை   பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  இருதயபுரம் கிராமத்தில் இவ்வீடுகள்  நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் தலா 6 இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு எஹெட் நிறுவனப் பணிப்பாளர் அருட்தந்தை கிறைட்டன் அவுஸ்கோன், செடக்  நிறுவனப் பணிப்பாளர் அருட்தந்தை ஜோர்ஜ் சிகாமணி ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளிடம் வீடுகளை யைளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .