2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

களுவாஞ்சிக்குடியில் 10 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 19 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை பெய்துவருகின்ற நிலையில், மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி கிராமத்தில் 10 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மேற்படி பகுதியில் வெள்ளம் தேங்கிநிற்பதால், பொதுமக்களின்  அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  புதன்கிழமை (17) காலை 8.30 மணியிலிருந்து  வியாழக்கிழமை (18) காலை  8.30 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 27.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X