2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வெருகல் படுகொலையின் 10 ஆவது ஆண்டு நினைவு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 11 , பி.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ருத்திரன்,தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரையில் வெருகல் படுகொலையின் 10 ஆவது ஆண்டு நினைவு நாள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் நினைவு கூறப்பட்டது.

கதிரவெளி மலைப் பூங்காவில் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்விற்கு  கட்சியின் தலைவரும் கிழக்கு மாகான சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமை தாங்கினார்.இதன்போது தேசியக் கொடி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி கொடி,கிழக்கு மாகாண சபைக் கொடி போன்றவை ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெருகல் படுகொலை தொடர்பான நினைவுப் பேருரையை தலைவர் உரையாற்றினார். 

அதன் பின்னர், படுகொலையின்போது உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து மௌன இறைவணக்கத்துடன் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.இவ் நிகழ்வில் உயிர் நீத்தவர்களின் பெற்றோர்கள், மனைவிமார்கள், பிள்ளைகள்;, சகோதரங்கள் மற்று கட்சி உறுப்பினர்களினால்   நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

2004 ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற இவ் வெருகல் படுகொலையின்போது 200 ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால்  படுகொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X