2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மட்டக்களப்பில் 103.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் அடை மழை பெய்து வருகின்ற நிலையில், அங்கு வெள்ள அபாயமும்  ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் இன்று புதன்கிழமை காலை 8.30 மணிவரை 103.4 மில்லிமீற்றர் மழை வீழ்;ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய அதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் முதலாம்  திகதி தொடக்கம் இன்றுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 1027.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி; பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .