2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மைத்திரியை ஆதரித்து 115 கூட்டங்கள்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 16 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 115 கூட்டங்களை நடத்துவதற்கு  ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட  அமைப்பாளர் ஏ.சசிதரன் தெரிவித்தார்.

பிரதான கூட்டங்களில் மைத்திரிபால  சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்  தலைவர் சஜித் பிரேமதாச ஊவா மாகாண எதிர்க்கட்சி தலைவர் ஹரின் பெர்னாண்டோ உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்குகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்குடா, பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் பிரசார கூட்டங்களும் மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாத்திரம் 40 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X