2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

119 குடும்பங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களினால் தங்களது வீடுகளை இழந்தவர்களை மீள்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 119 குடும்பங்கள் தற்காலிகக் கொட்டில்களை அமைப்பதற்கான உபகரணங்கள் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

முறக்கொட்டாஞ்சேனை மற்றும் புணானை மேற்கு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த இந்தக் குடும்பங்களுக்கு சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கூரைத்தகடுகள், சீமெந்து பைக்கட்டுக்கள் வழங்கப்பட்டன.

முறக்கொட்டாஞ்சேனையில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நஜீமுதீன், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பி;.ரவீந்திரன், அரச அதிகாரிகள் உட்படல பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X