2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

காத்தான்குடியில் 12 வட்டாரங்களை பிரிப்பதற்கு நடவடிக்கை

Kogilavani   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

காத்தான்குடியில் உள்ளூராட்சி மன்றத்திற்காக 12 வட்டாரங்களை பிரிப்பதற்கு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தலைமையில் அவரது காத்தான்குடி பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இக் கூட்டத்தில் காத்தான்குடி உள்ளுராட்சி மன்றத்திற்கான வட்டார முறை தொடர்பாக அதன் எல்லை நிர்ணயம் பற்றி கலந்துரையாடப்பட்டது.

காத்தான்குடி ஆற்றங்கரையிலிருந்து பிரதான வீதிவரை ஆறு வட்டாரங்களும், பிரதான வீதியிலிருந்து பெரிய தோணா வரை இரண்டு வட்டாரங்களும் பெரிய தோணாவிலிருந்து கடற்கரை வரை நான்கு வட்டாரங்களாகவும் பிரிப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இது தொடர்பாக தொடர்ந்து ஆராய்வதற்காக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .