2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 1350 பேருக்கு நியமனங்கள் வழங்குவதாக அமைச்சர் ஜோன் உறுதி: வி.முரளிதரன்

Menaka Mookandi   / 2012 ஜூன் 14 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற பட்டதாரிகளின் நேர்முகப்பரீட்சையின் படி தகுதியானவர்கள் என தெரிவுசெய்யப்பட்ட 1350 பேருக்கு நியமனங்கள் வழங்குவதாக  பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன உறுதியளித்தார் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 950 பேருக்கே நியமனங்களுக்கான தேவைப்பாடுகள் இருக்கின்ற நிலையில் மேலதிகமாக உள்ளவர்கள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுவந்தன.

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு சென்ற பிரதியமைச்சர் அங்கு இடம்பெற்ற நேர்முகத்தேர்வு குறித்தும் நியமனங்கள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது தொலைபேசியில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவை தொடர்புகொண்ட மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்டத்தில் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு கோரினார்.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு பட்டதாரிகளாக தெரிவுசெய்யப்பட்ட அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இந்த நியமனங்களுக்காக யாரும் பணங்களை வழங்கி ஏமாற வேண்டாம் என தெரிவித்த பிரதியமைச்சர், அவ்வாறானவர்கள் தொடர்பில் தமது கவனத்துக்கு கொண்டுவருமாறும் தெரிவித்தார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .