2025 மே 01, வியாழக்கிழமை

ஏறாவூரில் 141 டெங்கு நோயாளர்கள்

Kogilavani   / 2014 ஜூன் 27 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ ஹுஸைன்


ஏறாவூரில் இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து ஜுன் மாதம் வரை அடையாளங் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்திருப்பதாக சிரேஷ்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.எச்.எம்.பழீல் தெரிவித்தார்.

ஏறாவூரில் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம் தலைமையில்   வெள்ளிக்கிழமை (27) ஒருங்கிணைந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்பநல மருத்துவ மாதுக்கள், சுகாதாரத் தொண்டர்கள் ஆகியோர் இணைந்து ஏறாவூர்-2 பிரதேசத்தைச் சுத்தம் செய்யும் கூட்டிணைந்த பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

கட்டங்கட்டமாக டெங்கு ஒழிப்பை மேற்கொள்ளும் கூட்டிணைந்த துப்புரவாக்கும் பணியில் தாம் ஈடுபட்டிருப்பதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

தங்களது வீடுகளையும் சுற்றாடலையும் துப்புரவாக வைத்திருக்கும் சமூகப் பொறுப்பை ஒவ்வொரு பிரஜையும் கைக்கொண்டால் வீடும், வீட்டுச் சூழலும், கிராமமும், நகரமும் நாடும் தூய்மையானதாக இருக்கும் என்று சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணரவுடன் செயற்பட வேண்டும் என்று  அவர் வலியுறுத்தினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .