2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மதுபானத்துக்கு அடிமையான 150 பேருக்கு சிகிச்சை

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானப் பாவனைக்கு அடிமையாகி உடல், உள நிலை மோசமாக பாதிக்கப்பட்ட   150 பேருக்கு இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து ஓகஸ்ட் மாதம்வரை  புனர்வாழ்வுடன்,  மருத்துவச் சிகிச்சை அளித்ததாக  மட்டக்களப்பு உளநலச் சேவைகள் நிலையத்தின் சிரேஷ்ட உளநல மருத்துவர் பி.ஜுடி ரமேஸ் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட இவர்களை ஆய்வின் மூலம் கண்டறிந்து,  2 வாரகாலத்துக்கு புனர்வாழ்வுடன்,  மருத்துவச் சிகிச்சை அளித்ததாகவும் அவர் கூறினார்.

இந்தச் சிகிச்சையின் பின்னர் இவர்கள் வீடுகளுக்குத் திரும்பியதும், ஏற்கெனவே பயிற்றுவிக்கப்பட்டு கிராமங்களில் பணியாற்றும் சேவை காப்பாளர்களினால்   தொடர் கண்காணிப்பு, தகுந்த வழிகாட்டல், ஆலோசனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

மதுபானத்துக்கு  அடிமையாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு    விசேடமாக மட்டக்களப்பு, மாவடிவேம்பு வைத்தியசாலையுடன் இணைந்ததாக உருவாக்கப்பட்டுள்ள அரசாங்க 'ஆரோக்கியா' புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சையளிக்கப்படுகின்றது.  இங்கு ஒரே தடவையில் 10 ஆண்களும் 2 பெண்களுமாக தங்கியிருந்து சிகிச்சை பெறமுடியும் எனவும் அவர் கூறினார்.

இலவசமாக இரத்தப் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, நஞ்சகற்றல் செயற்பாடு, விற்றமின் மாத்திரைகள் வழங்குதல், நடத்தை மாற்ற சிகிச்சை, குடும்ப ஆதரவு சிகிச்சை ஆகியவற்றுடன் சமூக பங்களிப்பு பயிற்சிகள், நெருக்கீட்டு முகாமைத்துவம், ஆத்திரத் தணிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் இவ்வாறானவர்களுக்கு  வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

யுத்தத்துக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில்; மதுபானப் பாவனை அதிகரித்துள்ளதால், மதுபானப் பாவனையிலிருந்து இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் பரந்தளவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X