2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வெபர் விளையாட்டு மைதான புனரமைப்புக்கு 150 மில்லியன் ரூபாய்

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் 150 மில்லியன் ரூபா செலவில் நவீனமுறையில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிர்மாண வேலைகளை பார்வையிடுவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் பி.எஸ்.எஸ்.விஜயரட்ண,  பொறியிலாளர் எஸ்.பி.விஜயதுங்க உள்ளிட்ட குழு மட்டக்களப்பிற்கு வியாழக்கிழமை (24) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது.

நிர்மாண வேலைகள் குறித்து, பொறியியலாளர்களான எம்.மங்களேஸ்வரன், ஆர்.ரகுராமன், ஒப்பந்தகாரரான பி.சசிகுமார், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் உள்ளிட்டோருடன் அமைச்சின் பணிப்பாளர்  கலந்துரையாடினார்.

அத்துடன், மைதானத்தின் வேலைகளை விரைவுபடுத்துமாறும் அதற்கான ஆலோசனைகளையும்  அதிகாரிகளுக்கு வழங்கினார்.
வெபர் விளையாட்டு மைதானம், சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளி அரங்கு கொண்ட சகல வசதிகளும் அமைந்த நவீன விளையாட்டு அரங்காக நிர்மாணிக்கப்படவுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டு வரும் வெபர் விளையாட்டு மைதானத்தில், 400 மீற்றர் ஓடு தளம், கூடைப்பந்தாட்டக் கூடம், உதைபந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், கரப்பந்தாட்டக் கூடம், பட்மின்ரன் தளம் என அனைத்து விதமான விளையாட்டுத் தளங்களும் அமைக்கப்படவுள்ளன.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதமளவில் வெபர் மைதானம் திறந்து வைக்கப்பட்டு மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X