2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் 195பேர் சாட்சியமளிப்பு

Menaka Mookandi   / 2014 ஜூன் 09 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின்போது 195பேர் சாட்சியமளித்தனர் என்று ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெகஸ்வல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.

கடந்த நான்கு தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு நேற்று திங்கட்கிழமை (9) நண்பகலுடன் நிறைவடைந்தது.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இருதினங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலகத்திலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய இரு தினங்களும் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திலும் ஆணைக்குழு தனது அமர்வுகளை நடத்தியது.
கடந்த நான்கு தினங்களிலும் 195பேர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் வைத்து 105பேரும், மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் வைத்து 90பேரும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர் என்று ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

அதேபோன்று, 211 புதிய விண்ணப்பங்களும் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளன. இதில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 181 புதிய விண்ணப்பங்களும், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 35 புதிய விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மெகஸ்வல் பராக்கிரம பரணகம மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X