2025 மே 05, திங்கட்கிழமை

குளவிக் கொட்டுக்குள்ளான 20 பேர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரான்குளம் பிரதேசத்தில் 20 இற்கும் அதிகமானோர் குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

கிரான்குளம் பொலிஸ் சாவடிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் இவர்கள் குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளதாக அந்தப் பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தப் பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக மரம் ஒன்றிலிருந்த பெரிய குளவிக் கூடு வீழ்ந்ததால் அந்தக் கூட்டிலிருந்து வெளியாகிய பெருமளவான குளவிகளே இவர்களைக் கொட்டியுள்ளது.

இவ்வாறு குளவிக் கொட்டுக் உள்ளானவர்கள் ஆரையம்பதி வைத்தியசாலையிலும்  செட்டிபாளையம் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X