2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மட்டக்களப்பில் பொலிஸ் ஆலோசனைக்குழு கூட்டம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் ஆலோசனைக் குழுக்களுக்கான கூட்டமொன்று நேற்று வியாழக்கிழமை (24) மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் ஜயசிங்க மற்றும் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அநுரத் ஹக்மன பண்டார, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.ஹெட்டியாராய்ச்சி உட்பட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின் போது பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் அதன் நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையப் பிரிவுகளுக்கும் ஒரு பொலிஸ் நிலையத்திற்கு தலா ஏழு பேர் வீதம் பொலிஸ் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X