2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

காங்கேயனோடையில் 25 குடும்பங்களுக்கு குடிநீரைப் பெறுவதற்கான உதவி

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 15 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடைக் கிராமத்திலுள்ள 25 குடும்பங்களுக்கு நீர்வடிகாலமைப்பு அதிகாரசபையின் நீரைப் பெற்றுக்கொள்வதற்கான பவுச்சர்கள் (உறுதிச்சீட்டுக்கள்) வழங்கப்பட்டன. 

காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள 25 குடும்பங்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கிவந்தன. இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா ஹிறா  பௌன்டேஷனால் நீர் வடிகாலமைப்பு அதிகாரசபையின் நீரைப் பெற்றுக்கொள்வதற்காக இக்குடும்பங்களுக்கு பவுச்சர்கள் வழங்கப்பட்டன.

காங்கேயனோடை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் வித்தியாலயத்தின் தலைவர் றிபாய் தலைமையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் விசேட சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி  எஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X